அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி

கிங்ஸ்டன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார். கோலியின் தலைமையில் இந்தியாவுக்கு கிடைத்த 28-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு டோனி 27 டெஸ்ட் வெற்றி கண்டதே இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை கோலி முறியடித்தார்.

டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த டாப்-6 இந்திய கேப்டன்கள் வருமாறு:-

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அதிக வெற்றிகளை குவித்த டெஸ்ட் கேப்டன்களின் வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித்தும் (53 வெற்றி), ஆஸ்திரேலியா ரிக்கிபாண்டிங்கும் (48 வெற்றி) முதல் இரு இடங்களில் உள்ளனர். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.