இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இப்படிப்பட்டவரா?


இந்திய கிரிக்கெட் அணியினர் குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான தலைப்புடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியனர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் குழுவினர் இருக்கும் புகைப்படம் மோசமான எடிட் செய்யப்பட்டுள்ளது.

போட்டோஷாப் நுணுக்கம் தெரிந்தவர்கள் புகைப்படத்தில் ரவி சாஸ்திரி அமர்ந்திருக்கும் இடத்தில் மதுபானத்தை இணைத்துள்ளனர். இந்த புகைப்படம் தவறான தலைப்பில் ட்விட்டரில் வலம் வருகிறது. எனினும், விவரம் அறிந்தவர்கள் இது தவறான புகைப்படம் என்பதை தெரிவிக்கின்றனர்.

ரவி சாஸ்திரி பற்றிய சமூக வலைத்தள வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்


இதன் உண்மை புகைப்படத்தை தேடியதில், புகைப்படத்தில் மதுபானம் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. ஜூலை 6 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் ஆணையமான பி.சி.சி.ஐ. இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியுற்ற நிலையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்படுகிறது.


இந்த புகைப்படம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி துவங்கும் முன் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!