சீகைக்காயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து யூஸ் பண்ணுங்க… ஆறடி கூந்தல் உங்களுக்கு நிச்சயம்..!


நீங்கள் மற்ற பெண்களை போல மிக நீளமான கூந்தலை பெற வேண்டும் என கனவு காண்பவரா? உங்கள் முடி எளிதில் உடையக்கூடியதாகவும், வலிமை இல்லாததாகவும் உள்ளதா? அதனால் நீங்கள் உங்கள் கூந்தலை குதிரை வால் அளவில் மாற்றியுள்ளீர்களா? இதனால் கூந்தல் பராமரிப்பிற்கு மெனெக்கெட வேண்டியுள்ளதா?

நீண்ட, ஆரோக்கியமான, மற்றும் வலிமையான கூந்தலே ஒவ்வொரு பெண்ணின் கனவாகும். மக்கள் தங்களை அழகாக காட்ட எந்த தூரத்திற்கும் செல்ல தயாராக உள்ள காலம் இது. ஆரோக்கியமும், ஸ்டைலான தோற்றமும், கூந்தலை சீர்படுத்துவதில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்டது!

நம் கூந்தலை வலிமையாகவும் பளபளப்பாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வேண்டியதை போல் நம் கூந்தலை அழகாக்க ஏதாவது பொருள் உள்ளதா? ஆம், உள்ளது! அது வேறு எதுவுமில்லை, உங்களுக்கு தெரிந்த சீயக்காயே! வாங்க அதைப் பற்றி சற்று பார்க்கலாம்.


சீகைக்காயில் உள்ள சத்துக்கள் சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது. இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும். அக்காலத்தில் எல்லாம் சீகைக்காயை வாங்கி அரைத்து தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது சீகைக்காய் பொடி கடைகளில் எளிதில் கிடைக்கிறது. ஆகவே எவ்வித கஷ்டமும் இல்லாமல், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காயை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள் * சீகைக்காய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே கூந்தலைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.


சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள் * சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும். * தலையில் பேன் தொல்லை அல்லது ஏதேனும் தொற்றுகள் இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும்.

சீகைக்காயை ஷாம்பு போன்று எப்படி பயன்படுத்துவது? சீகைக்காயை ஷாம்பு போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம். இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.

தயிருடன் சீகைக்காய் சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடி நன்கு ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.-Source: poptamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!