பால்கனியில் நிர்வாணமாக இறந்து கிடந்த மாடல் அழகி… நடந்தது என்ன..?


கோலாலம்பூரில் இளம் மொடல் அழகி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் முதன்முறையாக, அமெரிக்க கோடீஸ்வரர் அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி மவுனம் கலைத்துள்ளனர்.

டச்சு மொடல் அழகியான இவனா ஸ்மித் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6வது மாடியின் பால்கனியில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். 20-வது மாடியிலிருந்து அவர் விழுந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரான அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி லூனா கைது செய்யப்பட்டனர். கொலைக்கான எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து அவர்கள் இருவரும் வெளியில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இணையதளத்தில் அவர்களுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்களுடைய குழந்தையை கடத்தி கொலை செய்ய உள்ளதாக கூட மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த லூனா, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவனா அறிமுகமானார். நாங்கள் மூவரும் சேர்ந்து உடலுறவு கொள்வது வழக்கம். டிசம்பர் 6ம் திகதி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, இரவு மூன்று பெரும் உறவு கொண்டோம்.

மறுநாள் காலையில் அதிக மதுபோதையில் இருந்ததால், இவனாவால் நடக்க முடியவில்லை. என்னுடைய கணவர் தான் அவரை அறைக்கு தூக்கி வந்தார். நான் காலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினேன். அந்த சமயம் இவனா உறங்கிக்கொண்டிருந்தார்.

நானும் சிறிது நேரத்தில் அங்கேயே உறங்கிவிட்டேன். விழித்த போது இவனாவின் பொருட்கள் மட்டும் அங்கிருந்தன. இவானா மாடலிங் செய்ய கிளம்பியிருக்கலாம் என நான் நினைத்துக்கொண்டேன்.

மாலை 5 மணிக்கு காவல்துறையினர் வந்த போது தான் என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியும். எங்களுக்கும் இவனாவின் இறப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியிருந்தார்.

மேலும் இவனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய உடலில் மதுவும், போதை மருந்துகளும் கலந்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் வேறு எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அலெக்ஸ் – லூனா தம்பதியினரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக அலெக்ஸ் மவுனம் கலைத்துள்ளார். கொடூர மரண வழக்கில் எங்கள் மீதான சூனிய வேட்டை முடிவுக்கு வந்ததுள்ளது. நாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் துவங்க உள்ளோம். எங்களுக்கு இனி கவலை இல்லை என கூறியுள்ளார்.-Source: viralseithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!