ஏலியன் இருப்பது உண்மையா? உறுதிபடுத்தும் அமெரிக்க அரசு.!

சதி கோட்பாட்டாளர்கள் ஒருவேளை இப்போது மகிழ்ச்சியாக வானுக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிப்பார்கள். பென்டகன் முதல் முறையாக மர்ம பறக்கும் பொருட்கள் தொடர்பான அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளது.

அதைவிட சிறப்பாக, அந்நிறுவனம் “அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள்” தொடர்பான சம்பவங்களின் அறிக்கைகள் சிலவற்றை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்
“அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விசாரணை” நடத்த மேம்பட்ட விண்வெளி அச்சுறுத்தல் கண்டுபிடிப்பு திட்டம்(Advanced Aerospace Threat Identification Program -AATIP) என்ற அரசின் இரகசிய முன்னெடுப்பு முன்னதாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்வதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டிலேயே இந்த இரகசிய முன்னெடுப்பை நிறுத்திவிட்டதாக பாதுகாப்புத்துறை கூறினாலும், அத்துறை இன்னும் சாத்தியமான வேற்றுலக ஏலியன் விண்கலன்கள் புலப்படும் நிகழ்வுகளை விசாரணை செய்துவருவதாக செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டோபர் ஷெர்வுட் கூறியுள்ளார்.

அடையாளம் காணுவதில் பாதுகாப்புத்துறை எப்போதும் கவனமாக இருக்கும்
“எங்களது வேலை சூழலில் அனைத்து விமானங்களின் நேர்மறையான அடையாளத்தை பராமரிப்பது மற்றும் நமது கிரகத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வேற்றுகிரக திறனையும் அடையாளம் காணுவதில் பாதுகாப்புத்துறை எப்போதும் கவனமாக இருக்கும்,” என ஷெர்வுட் கூறுகிறார்.

“பாதுகாப்புத்துறை தொடர்ந்து வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்க இராணுவ விமானிகள் எதிர்கொள்ளும் அடையாளம் காணப்படாத மர்ம விண்கலங்கள் தொடர்பான அறிக்கைகளை விசாரித்து, நமது கிரக எதிரிகளின் மூலோபாய நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றும் நமது பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடர்ந்து பணியாற்றும்” என தெரிவித்தார்.

90 களில் அரசாங்கத்திற்கான மர்ம பறக்கும் பொருட்கள் புலப்படுவது தொடர்பாக விசாரித்த முன்னாள் இங்கிலாந்து பத்திரிகையாளரான நிக் போப், பென்டகனின் இந்த கருத்துக்களை “ஆச்சர்யமான வெளிப்பாடு” என்று அழைக்கிறார்.

“முந்தைய அதிகாரப்பூர்வ அறிக்கைகள்யாவும் தெளிவற்றதாகவும், ஏஏஐடிபி அமைப்பு அடுத்ததலைமுறை விமானம் அச்சுறுத்தல்கள், , ஏவுகணைகள் மற்றும் டிரான்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என விமர்சகர்கள் கூறுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது. இந்த புதிய முன்னெடுப்பு மூலம் அதை தெளிவாக்கியதுடன் , உண்மையில் யுஎஃப்ஒக்கள் என்ன என்பதை ஆராய்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

ஏஏடிஐபி என்ற இந்த அமைப்பு இருப்பது முதல்முதலாக 2017 ஆம் ஆண்டு வெளிபடுத்தப்பட்டது . பென்டகன் குழு இந்த அமைப்பு பற்றிய கூடுதல் தகவல்களை தானாகவே வெளியிடுமா அல்லது அமெரிக்க சுதந்திர தகவல் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை விடுவிப்பதன் மூலம் வெளியாகுமா என இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் எது எப்படியிருந்தாலும் ஏலியன் கோட்பாட்டாளர்கள் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளனர்.- Source: gizbot


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.