ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ‘ஸ்டார் லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் முடிவு செய்தது.

இதற்காக தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்களை பால்கன்–9 ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் செயற்கைக்கோள் மென்பொருளை மேம்படுத்தும் பணி மற்றும் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தின் கேப் கெனவெரலில் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு 60 செயற்கைக்கோள்களுடன் பால்கன்–9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.- Source: dailythathi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.