பிரதமர் பதவி ஏற்ற பின் மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி

இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக் கூடிய, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாஜக வரலாறு காணாத சிறப்பு பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோடி வெளிநாடுகள் செல்லும் பயண திட்டங்கள் குறித்து தற்போதே வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கிரிகிஸ்தானில் நடக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு, மற்றும் ஜூன் 28ம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள ஜி 20 மாநாடு ஆகியவற்றில் மோடி கலந்துக் கொள்ளவுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் – பிரான்ஸ், செப்டம்பர் மாதம் – ரஷ்யா மற்றும் அமெரிக்கா, நவம்பர் மாதம் – தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.