மக்களவைக்கு 76 பெண் உறுப்பினர்கள் தேர்வு- தமிழகத்திலிருந்து மட்டும் 3 பேர்

]

இந்தியாவின் 19வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் பாஜக கூட்டணி 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெருங் கட்சியாக மீண்டும் ஆட்சியை பிடித்தது.

நாட்டில் தேர்தல் நடைபெறும் 542 தொகுதிகளில் 14 சதவீத அளவில் போட்டியிட்டனர். அதில் அதிகப்பட்சமாக மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து தலா 11 பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதை தொடர்ந்து பாஜக-வில் போட்டியிட்ட 47 பெண் வேட்பாளர்களில், 34 பேர் வெற்றியடைந்துள்ளனர். ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் களமிறங்கிய 4 பெண் வேட்பாளர்களும் , தமிழகத்தில் திமுக கூட்டணியில் களமிறங்கிய 3 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, கரூரில் போட்டியிட்ட ஜோதிமணி, தென் சென்னை தொகுதியில் முதன்முறையாக களம்கண்ட தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி இருவரும் முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் 66 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இம்முறை கூடுதலாக 10 பெண்கள் என மொத்தம் 76 பேர் மக்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். – Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.