பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

இவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தொலைநோக்கு பார்வையால் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.