ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகை; தள்ளுபடி..!


ஹானர் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் கானா ஃபெஸ்டிவல் துவங்கியிருக்கிறது. இன்று (ஏப்ரல் 8) துவங்கியிருக்கும் சிறப்பு சலுகை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் டேப்லெட் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சிறப்பு சலுகை விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. ஹானர் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹானர் 9என், ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 10 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இத்துடன் ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 9என் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


ஹானர் 9 லைட் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ.14,999 விலையில் இருந்து ரூ.5,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஹானர் 10 லைட் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7ஏ 3 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 7எஸ் 2 ஜி.பி. ரேம் மாடல்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹானர் 9ஐ 4 ஜி.பி. ரேம் ரூ.7,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 (6 ஜி.பி. ரேம்) மாடல் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவை தவிர ஹானர் சாதனங்களை வாங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!