பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.
காரில் இருந்து தலை மட்டும் வெளியில் தெரியுமாறு அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஹேமமாலினி முன்பாகவும் கார் கதவிற்குப் பின்புறம் இருந்தும் அவர் வெயில் படாத வகையில், பணியாட்கள் குடைபிடிக்கிறார்கள். இத்தனை வசதிகள் செய்யப்பட்டும் வெயிலை பொறுக்க முடியாமல் கூலிங் கிளாசுடன் தொகுதியில் வலம் வருகிறார்.
அவருடைய ஆடம்பர பிரசாரம் பற்றி தான் மதுரா மக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர். இந்த படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் ஹேமமாலினியின் பிரசார முறை மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹேமமாலினி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!