“அந்த” நடிகருடன் டேட்டிங் போக ஆசையாயிருக்கு – சூப்பர் ஸ்டார் மகள் ஷாக் தகவல்!


பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ஷாருக்கான் கௌரி கான் தம்பதியின் மகள் சுகானா கான். இவர் லண்டனில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். விரைவில் சினிமாவில் நுழையவும் இவர் ஆவலுடன் உள்ளார்.

கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் சுகானா கான் ஜூலியட் வேடம் ஏற்றிருந்தார். தனது மகள் நடிப்பதை பார்ப்பதற்காக ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றார். நாடகத்தைப் பார்த்த ஷாருக்கான் மிகவும் அற்புதமாக தனது மகள் நடித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் தனது மகள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஷாருக்கான் அறிவுரை கூறியுள்ளார். மேலும் படிப்பை முடித்த பின்னர்தான் நடிப்பைப் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.

தனது மகள் சினிமாவுக்கு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலரும் கூறி வருவதையும் சாருக்கான் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே சுகானா கான், தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒருவர் தாங்கள் எந்த நடிகருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு, இவர்தான் தாம் டேட்டிங் செய்ய ஆசைப்படும் நடிகர் என்று சுகானா கான் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படத்தில் இருந்தவர் தென்கொரியாவின் பிரபல பாடகர் பாடலாசிரியர் மற்றும் நடிகரான சுஹோ ஆவார். இவரது இயற்பெயர் கிம் ஜன் மேயான் ஆகும். இந்தியாவில் பிரபல நடிகரான ஷாருக்கான் மகள் தென் கொரிய நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளது இங்குள்ளவர்களுக்கு மோசமான தகவல் தான்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!