2018 ஆண்டில் ஆப்பிள், சாம்சங் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி..!


சாம்சங் எலெக்டிராணிக்ஸ் கோ நிறுவனம் தனது நிகர லாபம் 28.7 சதவிகிதம் சரிந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் அறிக்கையில் அந்நிறுவன லாபம் 966 கோடி டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டை விட 38.5 சதவிகிதம் குறைவு ஆகும்.

சாம்சங் லாபம் 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்ததை விட தற்சமயம் குறைவாக கிடைத்திருக்கிறது. சாம்சங் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 10.6 சதவிகிதம் சரிந்திருக்கிறது. சாம்சங் நிறுவன லாபம் 1210.4 கோடி டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

நான்காவது காலாண்டிற்கான மொத்த லாபத்தை சாம்சங் அறிவிக்கவில்லை. இறுதி செய்யப்பட்ட லாப அறிக்கை இம்மாத இறுதியில் வெளியிடப்படும். 2018 ஆம் ஆண்டில் மட்டும் சாம்சங் நிறுவன லாபம் மற்றும் விற்பனையில் 5242 கோடி டாலர்களாகவும், 24350000 டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது.


கடந்த மூன்று மாதங்களில் சிப்களுக்கான தட்டுப்பாடு சந்தையில் கணிக்கப்பட்டதை விட பெருமளவு சரிந்துவிட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் குறையத் துவங்கியதால் லாபம் சரியத் துவங்கியது.

மெமரி சாதனங்கள் பிரிவில் தட்டுப்பாடு பெருமளவு குறைந்ததும், ஸ்மார்ட்போன் பிரிவில் கடினமான போட்டி காரணமாக சாம்சங் நிறுவனத்தின் லாபம் சரிய காரணமாக அமைந்தன என்று சாம்சங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிள் நிறுவன லாபம் மோசமான ஐபோன் விற்பனை காரணமாக சரிவை சந்தித்தது. இதையொட்டி ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆப்பிள் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும், தனது ஊழியர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!