இந்திய அணியில் கோலியின் ஆக்ரோ‌ஷம் மட்டும் இல்லாட்டி… கபில்தேவ் புகழாராம்..!


இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அணியும் தற்போதுள்ள வேகப்பந்து குழு போல் செயல்பட வில்லை. தற்போது அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. இதை நம்ப முடிய வில்லை. இதுபோன்ற செயல்பாட்டையும் தீவிரமான ஆட்டத்தையும் பார்த்ததில்லை. இது கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.


நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறையபேர் உள்ளனர். இதன்மூலம் இன்னும் திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய முடியும். கோலியின் ஆக்ரோ‌ஷம் நல்ல பயன்களை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

2018-ம் ஆண்டு இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 179 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் சேர்ந்து 136 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!