17-வது சதமடித்தார் புஜாரா.. கங்குலியைக் கடந்தார்; கோலி அவுட்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை செய்தது.

அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா – விராட் கோலி ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாடியது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும்.

இந்திய அணி 116 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 102 ரன்களுடனும் கோலி 68 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!