தற்கொலைக்கு தூண்டும் ஸ்மார்ட்போன் பாவனை ; ஆய்வில் பகீர் தகவல்.!!


ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக வாயப்புகள் இருப்பதாக ஃபுளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்கிரீன் மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாதனங்கலை பயன்படுத்துபவர்களில் 48% பேர் தற்கொலை சார்ந்த பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மனநல மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ள்ள ஆய்வு அறிக்கையில், நீண்ட நேரம் மின்சாதனங்களை பயன்படுத்துவோர் மகிழ்ச்சியாக இல்லை. மின்சாதனங்கள் இல்லாமல் விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றவர்களுடன் பேசுவது உள்ளிட்டவற்றை மேற்கொள்பவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மனசோர்வு மற்றும் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் பருவ வயதுடைய பெண்கள் மத்தியில் அதிகளவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.. – Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!