உலகத்தில் அடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா..?


உலக அளவில் அடிமை தொழிலில் 4 கோடி பேர் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்களில் 4ல் ஒரு பங்கினர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த உலகளாவிய விவகாரத்தில் மனித கடத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர், கட்டாய திருமணம் மற்றும் ஆயுத போரில் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சேர்த்து பணியில் அமர்த்துதல் போன்றவை உள்ளன. இந்த அடிமை தொழில் சார்ந்த விசயங்களை ஒழிப்பதற்கான பிரசாரத்தில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளின் உடல்நலத்திற்கு அல்லது உடல்ரீதியான, மன ரீதியான, ஆன்மீக, நல்லொழுக்கம் அல்லது சமூக முன்னேற்றத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய பணிகளில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான உரிமைகள் சட்டம் உள்ளது.

இதற்கு எதிராக குழந்தை தொழிலாளர் முறை இன்றளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று கடந்த 2000ம் ஆண்டு முதல் மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரின் மனித கடத்தலையும் ஐ.நா. பொது சபை தடை செய்துள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!