7ம் அறிவு பாணியில் சீனாவில் நடந்த அதிர்ச்சி ஆய்வு – ஜீன் மாற்றப்பட்ட முதல் குழந்தை…!


சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உலகின் முதல் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.

மார்வல் பட ரசிகர்களுக்கு கண்டிப்பாக, எக்ஸ் மேன் படங்களை தெரிந்து இருக்கும். அதில் வரும் மனிதர்கள் எல்லோரும் மரபணு மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டு இருப்பார்கள். மியூட்டன்ட் என்று அழைக்கபடும் இவர்களுக்கு மரபணு மாற்றப்பட்ட காரணத்தால் நிறைய விசித்திர சக்தி இருக்கும்.

அப்படித்தான், சீனாவை சேர்ந்த ‘ஹீ ஜியாங்கு” என்ற மருத்துவர் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் ரைஸ் அண்ட் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து இருக்கிறார்.

சீனாவின் ஷென்ஸென் பகுதியில் உள்ள தன்னுடைய லேபில் இந்த குழந்தையை உருவாக்கி உள்ளதாக இவர் கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் 9 பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளில் சிறிய மாற்றங்களை செய்ததன் மூலம் அதன் ஜீன்களை சிறிய அளவில் மாற்றம் செய்ய முடிந்தது என்று இவர் கூறியுள்ளார். அதன்படி ஜீன் மாற்றப்பட்ட முதல் குழந்தை இரண்டு நாட்கள் முன் பிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.


ஜீன்களில் மாற்றம் செய்வதன் மூலம் ஒரு குழந்தைக்கு இயல்பாக இருக்கும் திறமையை பலமடங்கு அதிகரிக்க முடியும் என்கிறார். அதாவது 7ம் அறிவு படத்தில் வருவது போல, குழந்தையின் ஜீனை மாற்றுவதன் மூலம் அவர்களின் திறமையை அதிகரிக்க முடியும். அவர்களுக்கு புதிய திறமைகளை வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இப்படித்தான் அந்த குழந்தையை உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அந்த குழந்தைக்கு நிறைய நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த குழந்தை, பெற்றோர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

மொத்தம் மீதமுள்ள 8 குழந்தைகள் இப்படி பிறந்ததும் அது குறித்து தெரிவிப்பேன் என்றுள்ளார். ஆனால் உலகம் முழுக்க இவருக்கு ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இப்படி செய்வது இயற்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த விஷயத்தை கவனமாக கையாண்டு வந்த சீன அரசு, இவரை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இவரது லேபில் சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.-SOURCE : oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!