எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வெளியிட்டதை தொடர்ந்து எச்எம்டி குபளோபல் நிறுவனம் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
ஆகஸ்டு மாதம் அறிமுகமான நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டது. ரூ.12,499 என்ற விலையில் அறிமுகமான நோக்கியா 5 பல நோக்கியா பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதை தொடர்ந்து 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க முந்தைய நோக்கியா 5 போன்றே காட்சியளிக்கிறது.
சமீபத்தில் எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 2 அந்நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ரூ.6,999 விலையில் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 இந்தியாவில் சியோமி ரெட்மி 4A, ரெட்மி வை1 லைட், மோட்டோ சி பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும்.
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:
– 5.2 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஓரியோ அப்டேட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் பிளாக் மற்றும் டெம்பர்டு புளூ நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 5 நவம்பர் 14-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!