உங்க மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டதா? இதையெல்லாம் செய்யாதீங்க..!


நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும். இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு.

நாம் என்ன தான் பார்த்து பார்த்து நம்முடைய மொபைல் போனை வைத்திருந்தாலும் கண்டிப்பாக ஒரு முறையாவது அது தண்ணீர் கண்டத்தில் இருந்து தப்பி இருக்கும்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் 20 சதவீத மொபைல் போன்கள் தண்ணீரால் பாதிக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு வருவதாக தெரிய வந்துள்ளது. சரி, மொபைலை தண்ணீர் கண்டத்தில் இருந்து எப்படி தப்ப வைப்பது?

இதையெல்லாம் செய்யாதீங்க..!

உங்கள் போன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால் தயவு செய்து இந்த செயல்களை செய்யாதீர்கள்.

. மொபைல் போனை ஆன் செய்ய வேண்டாம். இது போனில் உள்ள motherboardல் குறைந்த மின்னழுத்தத்தை (short circuit ) ஏற்படுத்தலாம்.

. மொபைல் உள்ள எந்த ஒரு பொத்தானையும் அழுத்த வேண்டாம். இதுவும் சிக்கலை ஏற்படுத்தும்.

. சிலர் மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் போனை நன்றாக குலுக்குவார்கள். இதனால் தண்ணீர் வெளியேறிவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் தண்ணீர் போனிற்கு உள்ளே செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இது circuit ல் சேதத்தை ஏற்படுத்தவும் செய்யும். இதனால் போனை குலுக்க வேண்டாம்.


. மொபைல் தண்ணீர் விழுந்தவுடன் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். சார்ஜ் செய்வதால் போன் நன்றாக வேலை செய்யும் என்ற எண்ணம் ஏற்படாம். ஆனால் அது தவறு.

. தண்ணீரில் விழுந்த போன் சிறிது வேலை செய்ய தொடங்கியதும், போனில் எந்தவித செயல்பாடுகளையும் செய்ய வேண்டாம்.

. போன் தண்ணீரில் விழுந்தவுடன் எல்லாம் தெரிந்தது போல் போனை பிரித்து பார்க்க வேண்டாம்.

என்ன தான் செய்ய வேண்டும்?

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டியது இது தான்.

. போன் தண்ணீரில் விழுந்தவுடன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு என போனில் உள்ள அனைத்தையும் எடுத்து விடுங்கள்.

. போனில் பேட்டரி இருக்கும் பக்கத்தை தரையில் இருக்கும் படி வைத்து விட்டு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

. மற்றபடி தண்ணீரை எடுக்கும் முயற்சியில் உடனே ஊத வேண்டாம், போனில் உள்ள தண்ணீர் வடிய சில மணி நேரங்கள் காத்திருங்கள்.

. Hair drier போன்றவற்றின் மூலம் சூடான காற்றால் போனை சுத்தம் செய்யலாம். இது போனில் உள்ள தண்ணீரை ஆவியாக்கும். Hair drier இல்லை என்றால், அது போன்ற ஏதாவது ஒரு சாதனத்தை உபயோகிக்கலாம்.


. போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அரிசியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த முறையும் கைகொடுக்கும்.

. போனை ஆன் செய்த பிறகு போனின் தொடுதிரையில் பிரச்சனை மற்றும் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் போனை 3 நாட்களுக்கு பிறகு ஆன் செய்து பாருங்கள். அதன் பிறகும் பிரச்சனை நீடித்தால் போனை சரிசெய்யும் இடத்தில் கொடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!