கேப்டன் பொறுப்பில் புதிய சாதனை படைத்த ரோகித்சர்மா..!! குஷியில் ரசிகர்கள்..!!


ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இந்திய அணி இதுவரை 20 ஓவரில் 11 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 10-ல் வெற்றி பெற்றது. 1 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இதன்மூலம் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக்கை அவர் முந்தி சாதனை புரிந்தார்.

20 ஓவர் போட்டியில் 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஏற்கனவே 2017 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.

ரோகித்சர்மா நேற்று 4 ரன்னில்ஆட்டம் இழந்தார். பவுண்டரி மூலம் இந்த ரன்னை அவர் எடுத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் அவரது 200-வது பவுண்டரியாகும். 200 பவுண்டரி அடித்த 2-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி 214 பவுண்டரி அடித்துள்ளார்.

தில்சான் (இலங்கை) 223 பவுண்டரியுடன் முதல் இடத்திலும், முகமது ஷேசாத் (ஆப்கானிஸ்தான்) 218 பவுண்டரியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். கோலி 3-வது இடத்திலும், குப்திலும், ரோகித்சர்மாவும் இணைந்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் தவான் 92 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு 90 ரன் எடுத்து இருந்தார். ரிசப்பண்ட் 20 ஓவரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!