உமாமகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?


உமாமகேஸ்வர விரத நாளில் சிவ – சக்தியை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.

பிருகு முனிவர் சிவனை மட்டுமே வழிபடுபவர். அவர் அம்பாளை வழிபடாததால், இறைவனின் உடலில் பாதியைப் பெற்று அவரோடு இன்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி கடுமையான விரதம் இருந்தார்.

அதன்பயனாக, அவர் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். பார்வதி தேவி இருந்த அந்த விரதம் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ- சக்தியை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!