28.11.2017 இன்றைய ராசிபலன்


மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்-. மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்

கடகம்: காலை 7.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். நண்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்: காலை 7.07 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: காலை 7.07 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசர பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மீனம்: காலை 7.07 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!