200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய பெருமை..!! அதிர்ச்சியில் தேர்வுக்குழு..!!


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் கேப்டனாக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இப்படி தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை எற்பட்டதில் தேர்வு குழுவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். அவருக்கு கேப்டன் பதவியை அணி நிர்வாகம் கொடுத்ததில் அவர்கள் அதிருப்பதி அடைந்தார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

டோனி ஏற்கனவே 199 ஒருநாள் போட்டியில் கேப்டனாக பணியாற்றியிருந்தார். இந்த போட்டியின் மூலம் 200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியை இந்தியா கஷ்டப்பட்டு ‘டை’ செய்தது குறிப்பிடத்தக்கது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!