பெண்களே! இது போன்ற சந்தர்ப்பங்களில் கட்டாயம் வைத்தியரை நாடுங்கள்..!


மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் நாள் சுழற்சியில் ஏற்படும் உதிரப்போக்காகும். இந்த மாதவிடாயின் போது ஒவ்வொரு பெண்களும் எதிர்கொள்ளும் சவால்கள் ஆளுக்காள் வேறுபட்டது.

எனினும், இந்த மாற்றங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனை அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மகப்பேறு மருத்துவரை நாட வேண்டியது அவசியம் என நினைவில் கொள்ளுங்கள்.

01. மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுதல், அதிக கோபம், அதிகபசி, வழமைக்கு மாறான பதற்றம் போன்றன ஏற்படின் வைத்தியரை நாடுதல் சிறந்தது. இதன் போது ஒரு வாரத்திற்கோ அல்லது ஒரு மாதத்திற்கோ வைத்தியர் மருந்துகளை பரிந்துரைப்பார்.

02. சிலருக்கு உதிரப்போக்கு மிக அதிகமாக காணப்படும். இந்த நிலைமை என்டோமெட்ரியோசிஸினாலும் ஏற்படலாம். இந்த நிலைமையின் போது கருப்பப்பையில் உள்ள சுவரில் தசை வளர்ச்சி ஏற்படும். இதனால் தூக்கமின்மையும் ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் கட்டாயமாக வைத்தியரை நாட வேண்டும்.


03. சில பெண்கள் வாய் மூலகருத்தடை மாத்திரைகளை எடுக்காமல் இருக்கும் போதும் அவர்களுக்கு மிக அசாதாரண முறையில் உதிரப்போக்கு ஏற்படும். இதற்கு பைபுரொய்ட் கட்டிகள் அல்லது கருப்பை நீர்க்கட்டி என்பனவும் காரணமாக அமையும். இதனால் காலம் தாழ்த்தாது கட்டாயம் வைத்தியரை அணுக வேண்டும்.

04. மாதவிடாய் காலத்தில், தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் பொருட்படுத்த முடியாத தசைபிடிப்பு என்பன ஏற்படின் அவர்கள் என்டோமெட்ரியோசிஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் வைத்தியரை அணுக வேண்டும்.

05. ஒரு பெண் கருவுற்றிராத போதும் மாதவிடாய் ஏற்படுவது நின்றிருப்பின் கட்டாயம் வைத்தியரை அணுக வேண்டும். தைரொய்ட் பிரச்சினைகள், ஹோர்மோன் சமநிலையின்மை, கருப்பையில் செல்களின் வளர்ச்சி மற்றும் மனஅழுத்தம் என்பன இதற்கு காரணமாக அமையலாம்.

ஆகவே மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் போது அலட்சியம் கொள்ளாது உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!