விமான நிலையத்தை முற்றுகையிட்ட தெருநாய்கள்…. எங்கு தெரியுமா..?


பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சீனாவால் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. விமானம் இயங்குவதற்கு முன்னால் அது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து ஆடம்பர நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்டது, புதிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம். தற்போது இந்த விமான நிலையத்தை தெரு நாய்களும்- வெறி நாய்களும் ஆக்கிரமித்து உள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இது பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விமான நிலையத்தின் மேலாளரை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் நாய்கள் நுழைவதை ஒரு மேலாண்மை தொடர்பான பிரச்சினை அல்ல, மாறாக பாதுகாப்பு மீறலாக அது இருந்து உள்ளது. என கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணைக்கு இயக்குனர் ஜெனரல் உத்தரவிட்டு உள்ளார்.

New #Islamabad airport manager suspended after dogs found wandering in the lounge of Airport, DG #CAA ordered inquiry of the matter.
According to experts, the entry of stray dogs inside the airport was not a management-related issue, it was rather a breach of security. #ISBAlertspic.twitter.com/JYbVx1owvI

— SherY – (@SherySyed_) October 1, 2018

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!