காதலர்களை கலட்டி விட வேண்டுமா..? இணையத்தில் விசித்திர நிறுவனம்..!


தி பிரேக்அப் ஷாப்’ என்ற நிறுவனம் ஒன்று இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்க்கைத் துணைவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து செல்வது என்பது இருவருக்குமே மிகவும் வலி நிறைந்த விஷயம். ஒருவருக்கு ஒருவர் காயப்படுத்திக்கொள்ளாமல் பிரிந்து செல்லக்கூடிய வழிகளைச் சொல்வதோடு, அதைச் செய்தும் கொடுத்துவிடுகிறது இந்த பிரேக்அப் ஷாப்.

எப்படி, எவ்வளவு செலவு செய்து பிரிந்து செல்லும் முடிவை இன்னொரு வருக்குத் தெரிவிப்பது என்பது அவரவர் விருப்பம். இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்க 700 ரூபாய். கடிதம் என்றால் 1400 ரூபாய்.

தொலைபேசிக்கு 1900 ரூபாய். குக்கீஸ், வாழ்த்து அட்டை, சாக்லெட், டயரி, வீடியோகேம் போன்றவை அடங்கிய பரிசுப் பெட்டியுடன் 2 ஓயின் தம்ளர்களுடன் கூடிய நெஞ்சை உருக்கும் கடிதத்துடன் சொல்வதென்றால் 5,300 ரூபாய். இப்படிப் பிரிந்து செல்பவர்களுக்கு நிறுவனமே ஆளுக்கொரு பரிசுப் பெட்டியை வழங்குகிறது.

இதில் கடந்த காலப் புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், நகைகள், துணிகள் போன்றவற்றை அவரவருக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.

கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் மெக்கென்ஸியும் இவானும் இந்த இணையதளத்தை நடத்தி வரு கிறார்கள்.

‘‘எங்கள் மூலம் பிரிந்து செல்பவர்களுக்குக் குறைந்த அளவே வலியும் வருத்தமும் இருப்பது போலப் பார்த்துக்கொள்கிறோம். இருவருமே ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு வராமல், என்றென்றும் நட்புடன் இருக்க வைக்கும் எங்களின் சேவை’’ என்கிறார் மெக்கென்ஸி.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!