விற்பனைக்காக கொண்டு வந்த கம்பளி போர்வைகளை தானமாக வழங்கிய வியாபாரி..!! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி விஷ்ணு. கேரளாவில் பருவ மழை வெளுத்து வாங்குவதால் அங்கு சென்றால் போர்வைகளை நிறைய விற்று சம்பாதிக்கலாம் என்பதற்காக விலையுயர்ந்த 50 கம்பளி போர்வைகளை எடுத்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு அவர் கேரள மாநிலம் கண்ணூருக்கு வந்தார்.

இந்த நிலையில்தான் அங்குள்ள இரிட்டி நகர் அருகே மாங்கோடு என்னும் இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் நிவாரண முகாம் திறக்கப்பட்டு அங்கு 37 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருப்பதையும், அவர்கள் இரவில் குளிரில் நடுநடுங்குவதையும் கேள்விப்பட்டார்.

இதனால் அவரிடம் மனித நேயம் துளிர்த்து. உடனே தான் கொண்டு வந்திருந்த கம்பளி போர்வைகள் அனைத்தையும் இரிட்டி நகர தாசில்தார் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அதை நிவாரண முகாமில் தங்கியிருப்போருக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய இந்த செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.source-dailythanthi

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!