அட இந்த பொண்ணு தான் கேப்டன் மருமகளா…? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்


நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் சகாப்தம் படத்தில் நடிப்பு, டான்ஸ், சண்டை என்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
விஜயகாந்த் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து, ரசிகர்களை சேர்த்தார், அரசியலில் குதித்தார். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தந்தையின் வழியில் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் நடிகராகியுள்ளார்.

இந்த நேரத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் ஒரு பெண்ணுடன் இருப்பது போல் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று ஆராய்ந்ததில் அவருடன் நெதர்லாந்தில் படித்த தோழியாம்.

இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஷண்முக பாண்டியன் அந்த பெண்ணுடன் இருந்து புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறி நடிவில் இடைவெளி விட்டு….. இது நல்ல வருடம் என குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்த்து தான் மக்கள் கேப்டனின் மருமகள் இவர்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!