மோடி, கோலி, அமிதாப் பச்சனுக்கு ஆப்பு வைத்த டுவிட்டர்..!


டுவிட்டரின் அதிரடியான நடவடிக்கையால் பிரதமர் மோடி, விராட் கோலி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. அந்த போலியானசமூக வலைதள பக்கங்களிலிருந்து தவறான தகவல்களும் வதந்திகளும் பெருமளவில் பரப்பப்படுகின்றன.

அதனால் சமூக வலைதளங்களின் மீதான நம்பகத்தன்மை கெட்டுவிட்டது. தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் டுவிட்டரில் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், போலிகணக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு அந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

டுவிட்டரின் இந்த அதிரடியான நடவடிக்கையால், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, கேப்டன் கோலி மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

போலிடுவிட்டர் கணக்குகள் வைத்திருந்த பெரும்பாலானோர் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர். டுவிட்டரில் அதிகமாக பின்பற்றப்படும் மூன்றாவது அரசியல் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மோடியை பின்பற்றிய 4 கோடியே 30 லட்சம் பேரில் 1 கோடி டுவிட்டர் கணக்குகள் போலிஎன தெரியவந்துள்ளது.

அதேபோல, ராகுல் காந்தியை பின்பற்றிய 70 லட்சத்தில் 20 லட்சம் கணக்குகள் போலியானவைகண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

டுவிட்டர் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையால், கேப்டன் கோலி, அமிதாப் பச்சன் ஆகியோரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!