முகத்தை மறைத்து சால்வை… ரகசியமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கேப்டன்!


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை வீல் சேரில் வைத்து சால்வை மூலம் அவர் முகத்தை மறைத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு அவரது குடும்பத்தினர் ரகசியமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் நேற்று (08-07-2018) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். அவர் விமான நிலையத்திற்கு வரும் தகவல் அறிந்து ஏராளமான செய்தியாளர்கள் மற்றும் கேமரா மேன்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அமெரிக்கா செல்லும் விமானம் என்பதால் விஜயகாந்த் சுமார் 11 மணி அளவில் விமான நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் 11.30 மணியை கடந்த பிறகும் விஜயகாந்த் விமான நிலையத்திற்கு வரவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த செய்தியாளர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது தான், விஜயகாந்த் வி.ஐ.பிக்கள் செல்லும் வாயில் வழியாக 11 மணி அளவிலேயே விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டது தெரியவந்தது. மேலும் வி.ஐ.பி நுழைவு வாயில் வழியாக விஜயகாந்தை அவரது மனைவி பிரேமலதா தான் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் சில உறவினர்கள் மட்டுமே உடன் இருந்துள்ளனர்.

அதிலும் விஜயகாந்த்தை வீல் சேரில் அமர வைத்து உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் வேறு யாருக்கும் தன்னை அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சால்வை ஒன்றால் தனது தலையில் முக்காடு போட்ட நிலையில் வீல்சேரில் அமர்ந்து சென்றுள்ளார்.

பாஸ்போர்ட் வெரிபிகேசனுக்காக விஜயகாந்தின் முகத்தை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது தான் விஜயகாந்த் தலையை சுற்றியிருந்த சால்வையை அகற்றி முகத்தை காட்டியுள்ளார். இதன் பின்னர் அவர் விமானத்தில் ஏறி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏற்கனவே விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தே.மு.தி.க தரப்பு தெரிவித்துவிட்ட நிலையில், எதற்காக அவரை ரகசியமாக விமான நிலையத்திற்குள் அழைத்தச் சென்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!