புளியம் இலையில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா..?


புளி சமையல், மருத்துவம், அலங்காரம், மற்றும் சாய வகையாகவும் பயன்படுகின்றது.

புளி உடலிற்கு பல நன்மைகளைச் செய்வதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை பேணுகின்றது.

புளிய மரத்தில் உள்ள இலை, பழம், மற்றும் தண்டு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான நன்மைகளை நமக்கு தருகின்றன.

புளியம்பழம் நீண்ட பீன்ஸ் வடிவமுடையது, இது கடினமான கோதினால் மூடப்படிருக்கும். கிழக்காசிய நாடுகளில் காய்ச்சலை குணப்படுத்துவதுவதற்கு புளியம்பழத்தை மாவுக்கட்டாக நெற்றியில் வைப்பார்கள்.
புளியம் இலையினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்.

1. நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

நீரிழிவு நோய் உலகளவில் பிரபலமடைந்துள்ளதிற்கு காரணம் பலர் அதனால் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் சில தரவுகளின் படி புளியம் இலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நன்மைகளை செய்கின்றது.

இது இன்சுலீன் உணர்திறனை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.


2. வீக்கத்திற்கு எதிராக செயற்படும்.

புளியம் இலையில் வீக்கத்தினை குறைக்கும் தன்மை உள்ளது. இது வீக்கத்தை குணப்படுத்தி திசுக்களை ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.

3. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும்.

புளியம் இலையினைஅரைத்து பானமாக அருந்துவதனால் வயிற்றுப் புண் இலகுவாக குணமடைந்து விடும். அத்துடன் அதனால் ஏற்பட்ட வலிகளையும் முற்றாக நீக்கி விடும்.

4. மலேரியா காய்ச்சலில் இருந்து தீர்வைத் தரும்.

புளியம் இலை நம்மை மலேரியாவில் இருந்து பாதுகாப்பதற்காக சிறப்பாக செயற்படுகின்றது. புளியம் இலைச் சாறு மலேரியாவை ஏற்படுத்தும் Plasmodium falciparum இன் வளர்ச்சியைத் தடுக்கின்றது.

அத்துடன் புளியம் இலையில் தயாரிக்கும் தேநீர் மலேரியாவினால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும்.

புளியம் இலை மாதாவிடாயின் போது ஏற்படும் பிடிப்புக்களை இலகுவாக குணப்படுத்துவதுடன், அந்த நேரங்களில் ஏற்படும் வலிகளில் இருந்து தீர்வைத் தருகின்றது.

புளிய மரத்தில் இலை மட்டுமல்லாது அதனுடைய தண்டு பகுதிகளில் இருந்து பெறப்படும் சாறு வலி நிவாரணியாக செயற்படுகின்றது.

புளியம் இலை உண்மையிலே பல நன்மைகளை நமக்கு தருகின்றன.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!