கேப்டனாக மாறிய சூப்பர்ஸ்டார்… பிரஸ் மீட்டில் கோபத்துடன் ‘யே’ என கத்தி ஆவேசம்..!


தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நடிகர் ரஜினிகாந்த் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இன்று சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவருக்கு தூத்துக்குடி மக்கள் அமோகமான வரவேற்பு அளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ரஜினி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக வாக்களித்திருக்கிறார்

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மக்களிடம் பேசிய போது, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அவரிடம், ”நீங்க யார்? இவ்வளவு நாள் நாங்க போராடிக் கொண்டிருந்த போது எங்க போயிருந்தீங்க? அப்போ மட்டும் சென்னை ரொம்ப தூரத்துல இருந்துதா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி இருக்கிறது.

தூத்துக்குடியில் மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னை வந்து இறங்கி இருக்கிறார் ரஜினி காந்த். விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய உடனேயே, அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர்.

அப்போது ரஜினி ”கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என கருத்து தெரிவித்தார்.” அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ”நீங்கள் பேசுவது போலீசையும் அரசையும் ஆதரித்து பேசுவது போல இருக்கிறதே?” என கேட்டிருக்கிறார். இந்த கேள்வியால் கடுப்பான ரஜினி ”யே யாருய்யா?” என ஏக வசனத்தில் எரிச்சலடைந்திருக்கிறார்.

மேலும் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு ”வேற யாரு? கேள்வி இருக்கா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு கடுப்புடன் தனது காரில் ஏறி சென்றிருக்கிறார்.

இவர் இப்படி எரிச்சலடைந்து பேசியது முன்பு ஒரு முறை, பத்திரிக்கையாளரிடம் விஜய்காந்த் நாக்கைத்துறுத்தி, கோபமாக எச்சரித்ததை நியாபகப்படுத்தும் விதமாக இருந்தது. இது தொடர்பாக பேசுகையில்” நீங்க யார்னு அந்த இளைஞர் கேட்ட கேள்விதான்” ரஜினி-ன் இந்த கோபத்திற்கு காரணம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!