பாத்ரூமில் முதன் முறையாக டேட்டிங்… இது டொனால்ட் – மெலானியா ட்ரம்ப் காதல் கதை!


மெலானியா நியூயார்க் நகருக்கு வர காரணமாக இருந்தது அவரது ஃபேஷன் மாடலிங் கனவுகள் தான். நியூயார்க் நகரில் மாடலிங் செய்ய மெலானியாவிற்கு வாய்ப்புகளும் அமைந்தன.

அவர் பல ஷோக்களில் கலந்துக் கொண்டு வந்தார். அப்படி தான் ஒருமுறை ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு முறை தனது ஃபேஷன் ஷோவின் நடுவே கண்டார்.

ஆரம்பத்தில் ட்ரம்ப் மீது மெலானியாவுக்கு நம்பிக்கை இல்லை. தனது தோழிகளிடம் ட்ரம்ப் குறித்த சந்தேகங்களை கலந்தாலோசித்து உள்ளார் மெலானியா. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்திய காதலின் காரணமாக இவர்கள் ஏழு வருடம் காதலித்து, பிறகு திருமணம் செய்துக் கொண்டனர்.

முதல் முறையாக இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது. டொனால்ட் ட்ரம்ப்புக்கு வயது 52. மெலானியாவுக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது…

ஃபேஷன் வீக்!
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நியூயார்க் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக டொனால்ட் ட்ரம்ப்பும் – மெலானியாவும் சந்தித்துக் கொண்டனர். அப்போது டொனால்ட் ட்ரம்ப் வயது 52, மெலானியா வயது 28. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் 24 வருடங்கள் ஆகும். ஃபேஷன் ஷோவில் நடந்த பார்ட்டியில் கலந்துக் கொள்ள வந்திருந்தார் டொனால்ட் ட்ரம்ப். அவர் மெலானியாவை சந்தித்து பேசி டேட் செய்த இடம் பாத்ரூம் என்று அறியப்படுகிறது. மெலானியாவை கண்டவுடனே ஈர்ப்படைந்த ட்ரம்ப் அவரிடம் தொடர்பு எண் கேட்டுள்ளார்… ஆனால், தனது எண்ணை அளிக்காமல், ட்ரம்ப்பின் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டாராம் மெலானியா.

டேட்டிங்!
2005ம் ஆண்டு சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மெலானியா, “ட்ரம்ப்பை கண்டதுமே ஈர்ப்பு கொண்டேன். முதல் முறையிலேயே ஒரு ஸ்ட்ராங் கெமிஸ்ட்ரி, எனர்ஜி வெளிப்பட்டது. நாங்கள் சிறந்த நேரத்தை பகிர்ந்துக் கொண்டோம். முதல் முறையில் இருந்தே நாங்கள் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேச துவங்கினோம்” என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பார்த்த விரைவிலேயே டேட்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ட்ரம்ப் உடன் பழகிய ஆரம்பக் கட்ட நாட்களில் அவர் மீது நம்பிக்கை குறைவாக தான் இருந்தது என்று தனது தோழிகளுடன் தான் பகிர்ந்துக் கொண்டதாக நியூயார்க்கில் 2016ம் ஆண்டு ஜி.கியூ இதழுக்கு அளித்த பேட்டியில் மெலானியா கூறியுள்ளார்.

செக்ஸ் மற்றும் பிரிவு!
1999ல் ஹோவார்ட் ஸ்டேர்ன் என்ற வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியின் போது, நாங்கள் இருவரும் ஒருநாளில் பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வோம் என்று அதிரடியாக கூறி ட்ரம்ப் ஒரு ப்ளேபாய் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கினார் மெலானியா. 2000ம் ஆண்டு பிரசிடென்ட் தேர்தல் வேலைகளில் இருந்த போது டிரம்ப் மற்றும் மெலானியா இடையே பிரிவு ஏற்பட்டது. அப்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், மெலானியா அற்புதமான பெண்மணி, அவர் அதிரடியான பெண்மணி, சிறந்த பெண்மணி… நான் அவரை மிஸ் செய்கிறேன் என்று டிரம்ப் கூறி இருந்தார். அடுத்த ஒரு மாதத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

பிரபோஸ்!
மெலானியா ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வந்த ட்ரம்ப், 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 காரட் வைரத்தால் உருவான 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான வைர மோதிரத்தை அணிவித்து ப்ரபோஸ் செய்தார். மெலானியாவும் தட்ரம்ப்பின் பிரபோசலை ஏற்றுக் கொண்டார். 2005ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். ப்ளோரிடாவில் இருக்கும் பாம் பீச்சில் இவர்களது திருமணம் நடந்தது. திருமணமான போது டிரம்ப் வயது 58, மெலானியா வயது 34. மெலானியா ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவி. இவருக்கு முன் இவானா (1977 -1992) மற்றும் மார்லா (1993 – 1999) என்ற இருவரை திருமணம் செய்திருந்தார் ட்ரம்ப்.

உறவின் ரகசியம்!
ட்ரம்ப்புக்கு சொந்தமான மார்-ல-லாகொ என்ற பீச் ரிசார்ட்டுக்கு தேனிலவு சென்றது இந்த ஜோடி. மறுவருடமே பாரன் ட்ரம்ப் எனும் ஆண் குழந்தை இவர்களுக்கு பிறந்தது. இந்த ஜோடிக்கு ஒரே ஒரு மகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், “எனக்கும் மெலானியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதே இல்லை. நான் இவருடனான உறவை ஸ்ட்ரெஸ்-ஃப்ரீயாக உணர்கிறேன். நாங்கள் இருவரும் ஒரு இணக்கமான உறவில் இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

எல்லாமே மெலானியா தான்!
2007ம் ஆண்டு அளித்த வேறொரு பேட்டியில், “குழந்தை வளர்ப்பை முற்றிலும் மெலானியா தான் பார்த்துக் கொள்கிறார். அவர் ஒரு சிறந்த தாயாக திகழ்கிறார். அவர் குழந்தை மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். அதற்கான அனைத்து செலவுகளை மட்டுமே நான் பார்க்கிறேன்” என்று ட்ரம்ப் கூறி இருந்தார். 2015ம் ஆண்டு ட்ரம்ப் மீண்டும் பிரசிடென்ட் தேர்தலில் போட்டியாளராக தேர்வானார். அதன் பின் அதிக சர்ச்சைகள், பேட்டிகள் என ட்ரம்ப் உலகளவில் பிரபலம் ஆனார். யாருமே எதிர்பாராத வண்ணமாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வானார். ஆரம்பத்தில் மெலானியாவுக்கு ஃபர்ஸ்ட் லேடி ஆவதில் தயக்கம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை புரளிகள் என ட்ரம்ப் மறுத்தார்.

சர்ச்சை!
ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிறகு ஐந்தாறு மாதம் கழித்தே மெலானியா ஃபர்ஸ்ட் லேடியாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தான் ட்ரம்ப் உடன் பல வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு மெலானியா உடன் பங்கெடுத்துக் கொண்டார். சமீபத்தில் ட்ரம்ப்புக்கும் ஒரு பார்ன் நடிகைக்கும் தொடர்பு இருந்ததாகவும், இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!