இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள்..!


65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் இன்று அறிவித்தார். இதில் இசையமைப்பாளர் ஏர் ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் சிறந்த பின்னணி இசை ( மாம்) சிறந்த பாடல் இசை – (காற்று வெளியிடை) அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் சிலபஸ் என்ற படத்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் பூ, மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார். சிறப்பு பிரிவில் பார்வதி மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்து வருகிறார்.

* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

* சிறந்த படம் பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும்

* சிறந்த இந்திப்படம் நியூட்டன்

* சிறந்த தமிழ் படம் TO LET ( செழியன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை)

* மாம் இந்தி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

* சிறந்த ஆக்‌ஷன், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருது – பாகுபலி 2

* சிறந்த தெலுங்கு படம் – காஸி

* காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது

* சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!