அமெரிக்க பாராளுமன்ற குழுவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் மார்க்…!


சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் குழுவின் முன்னர் பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆஜராகி நேற்று பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கல்லூரி பருவத்தில் நான்தான் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். அதை நானேநடத்தி வருகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அகன்ற தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது பெரிய தவறு.

பேஸ்புக் நிறுவனத்தை நடத்தி வருவதால் அதில் நடக்கும் தவறுகளுக்கு நானே முழு பொறுப்பாளி என்பதால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!