செடி நிறைய ரோஜா பூக்கள் பூத்து குலுங்க இதோ எளிய வழி..!


பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தோட்டம் இல்லாவிட்டலும் சிறுசிறு தொட்டிகளில் பூச்செடிகளாவது வைத்திருப்போம். அதில் மிக முக்கியமாக நாம் எல்லோருமே விரும்பி வளர்க்கப்படும் செடி என்றால் அது ரோஜா தான்.

மற்ற செடிகளைப் போல ரோஜா செடி வளர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டும்.

எவ்வளவு தான் உரம் வாங்கிப் போட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தாலும், பூக்கள் மிக அரிதாகவே பூக்கும். ஆனால் நமக்கோ செடி நிறைய பூக்கள இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

அப்படி நினைப்பவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே அதற்கு ஒரு வழியுண்டு.

1 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். 2 வாழைப்பழத்தின் தோலை உரித்து, சிறுது சிறிதாக கட் செய்து அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வேண்டும்.

நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் காபி தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். அது ஆறியவுடன் அதில் நன்கு புளித்த தயிரை ஒரு கப் கலந்து ஒரு நாள் முழுக்க ஊற வைத்திருங்கள். பின்னர் அந்த கலவையை வடிகட்டி, செடிகளுக்கு தெளித்து விடுங்கள்.

பிறகு பாருங்கள் உங்கள் வீட்டுச் செடியில் எவ்வளவு பூக்கள் பூக்கின்றன என்று.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!