அமெரிக்காவில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிம் குக், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் ‘பாதுகாப்பு ஓட்டைகளை’, அதாவது ப்ரைவஸி பாலிஸிகள் எனப்படும் தனியுரிமை கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதெல்லாம் (தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்படும் ப்ரைவஸி கட்டுப்பாடுகள்) நீண்ட காலத்திற்கு முன்னரே நிகழ்த்தப்பட்டு இருக்க வேண்டும், இப்போது கால கடந்து விட்டது’ என்றும் டிம் குக், பேஸ்புக்கை சாடியுள்ளார்.
அமெரிக்காவில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிம் குக், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளார்.!
பேட்டியின் போது, ‘ஒருவேளை பேஸ்புக்கின் சிஇஓ ஆன மார்க் ஜுக்கர்பெர்க் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்.?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ‘நான் இம்மாதிரியான சூழ்நிலையை உருவாக்கவே மாட்டேன்’ என்று பதிலளித்துள்ளார். அதாவது மார்க் ஜுக்கர்பெர்க் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
கடுமையாக விமர்சித்துள்ளார்.!
ரீகோட் மற்றும் எம்எஸ்என்பிசி உடன் நிகழந்த இந்த பேட்டியானது, வருகிற ஏப்ரல் 6 அன்று ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேட்டியில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து நிறுவனங்களையும், டிம் குக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எங்களாலும் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்..!
‘என்னை பொறுத்தவரை எந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதே ஒரு சிறந்த கட்டுப்பாடு – அது சுய கட்டுப்பாடாகும். எனினும், நாம் அதற்கெல்லாம் அப்பால் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்’ என்று கூறியதோடு நில்லாமல், ‘நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தால், பல கோடிகளை சம்பாதிக்க முடியும். ஆனால் நாங்கள் அதை தேர்ந்தெடுக்கவில்லை.’ என்றும் டிம் குக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா.!
பயனர்களின் பேஸ்புக் டேட்டாவானது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்கள், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வழியாக வெளியான நாளில் இருந்து, அதிகாரபூர்வமான விசாரணை உட்பட பல சிக்கல்களையும், விமர்சங்களையும் பேஸ்புக் நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஆன டிம் குக்கின், இந்த விமர்சனம் பேஸ்புக்கை இன்னும் பின்னடைய செய்யும் என்பது வெளிப்படை.
பங்களிப்பை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்.!
சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில், பேஸ்புக் நிறுவனத்தின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.-Source: gizbot
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!