பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பொறுப்பேற்றார்..!


பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி. இவர் அமைச்சராக இருந்தபோது பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

அத்துடன் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எனவே, விவாதம் நடத்துவதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகினால் முறையாக இருக்கும் என எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிபர் குசின்ஸ்கி பதவி விலக மறுத்து வந்தார்.

அதிபருக்கு சாதகமாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஆளுங்கட்சியினர் பேரம் பேசும் வீடியோ வெளியானதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து குசின்ஸ்கி விலகினார்.

இந்நிலையில், பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா இன்று பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!