சிலந்தி கடித்து விட்டதா..? உடலில் விஷம் பரவாமல் தடுக்க முதலில் இத செய்யுங்க!


சிலந்தி கடித்துவிட்டதே என்று அஞ்சி அலறுவதை விட, பக்குவமா இந்த டிப்ஸ் ஃபாலோ செய்தால் உடம்பில் அதன் விஷம் பரவாமல் இருப்பதை தடுக்கலாம்.

காண்பதற்கு சிலந்தி பூச்சிகள் சாதாரணமானவையாக இருந்தாலும், அவை கடித்தால் நமக்கு ஏற்படும் பாதிப்பு அசாதாரண விளைவை ஏற்படுத்தக்கூடியாதவும் அமையும்.

எல்லா சிலந்திகளையும் கண்டு பயப்படத் தேவையில்லை என்றாலும் அவற்றில் சில வகை இனங்கள் மிகவும் கொடூரமானவை.

சிலந்திகள் கடித்தால் உயிர் போகாது. ஆனால் அவற்றில் காணப்படும் கொடிய விஷம் மனித உடலில் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

சிலந்தி கடிக்கு சிகிச்சைகள் உள்ள போதிலும் பூரணமாக குணமடைய வெகு நாட்களாகும்.

சிலந்திகள் கடித்த உடனேயே அறிகுறிகள் தென்படவேண்டுமென்பதில்லை.

ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின்பு உடலில் ஏற்படும் சில மாற்றங்களாக முதலில் சிவந்த தடிப்புகளும், ஊறலுடன் விஷமானது படிப்படியாக உடலில் ஊடுறுவும்.

சிலந்தி கடித்த பின் உடலில் நடைபெறும் சில அறிகுறிகள் இவை,

* கடித்த பகுதியிலும் உடலின் பிற பாகங்களிலும் ஊறல் ஏற்படும்

* சிவந்த நிறத்திலுள்ள தடிப்புகள் தோன்றும்

* தோல் மெதுவாக உறிதல்

* கடிபட்ட பகுதியில் சூடு இட்டது போன்று உணர்தல்

* தாகமின்மை

* காய்ச்சல் மற்றும் கடும் வலி


சிலந்தி பூச்சி கடித்தலுக்கான சில ஆயுர்வேத சிகிச்சை முறைகள் இதோ..

கடிபட்ட இடத்தில் முதலில் துளசியும், பச்சை மஞ்சளும் அரைத்துப்பூச வேண்டும்.

வில்வவேர், துளசி இலை, கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லி முள்ளி, புங்கம் பருப்பு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்க வேண்டும்.

இதையடுத்து வெள்ளாட்டின் ஹோமியத்தை (மூத்திரம்) பொடித்துக்கொள்ளப்பட்ட ஆயுர்வேத மூலிகை பொடியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தக் கலவையை சிறிய மாத்திரைகள் போன்று தயார் செய்து வேளைக்கு ஒன்று முதல் இரண்டு வரை சாப்பிட்டு வர வேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்பட்டுள்ள விஷத்தன்மை நீங்கி புத்துயிர் பெறலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!