13.03.2018 இன்றைய ராசிபலன்


மேஷம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனபான்மை தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!