எவ்வளவு தரமான பேட்டரியும் ஒரு நாள் காலாவதி ஆகிவிடும். இதில் ஸ்மார்ட்போன் பேட்டரி மட்டும் விதிவிலக்கல்ல. எனவே நாம் ஸ்மார்ட்போன் நீண்ட நாள் உழைக்க பேட்டரியை கீழ்க்கண்ட முறையில் பாதுகாக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சார்ஜ் போடும் போது நாம் அடிக்கடி சில தவறுகளை செய்துவிடுகிறோம். எனவே ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது செய்யக்கூடாத 10 முக்கிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
ஒரிஜினல் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள்
நீங்கள் லேப்டாப்பிலோ, அல்லது கணிணியிலோ அடாப்டரை வைத்து சார்ஜ் போட்டால் மின்அழுத்த விகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவே பேட்டரிக்கு கிடைக்கும். இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் காலாவதி ஆகிவிடும்.
உங்கள் போனுக்கு ஏற்ற மின் அழுத்தத்தை ஏற்கும் சக்தி, ஒரிஜனல் சார்ஜருக்கு தான் இருக்கும் . எனவே உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ்போட அதன் ஒரிஜினல் சார்ஜரை மட்டும் எப்போதும் பயன்படுத்துங்கள்.
மலிவான சார்ஜர் வேண்டாம்
குறைந்த விலையில் கிடைக்கும் போலியாக தயாரிக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாதீர்கள். டூப்ளிகேட் என்ற பெயரில் கிடைக்கும் குறைந்த விலை சார்ஜர்களை பயன்படுத்தினால் பேட்டரியின் ஆயுள் தாங்காது. உங்கள் போனின் ஆயுளையும் பாதிக்கும்.
சார்ஜின் போது பேனல் கவரை கழற்றிவிடுங்கள்
ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் பொதுவாகவே வெப்பமாக காணப்படுவது இயல்பு .எனவே கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க போடப்படும் பேனல் கவருடன் போனை சார்ஜ் போட்டால், போனின் வெப்பம் இன்னம் அதிகரிக்கும் , இதனால் போனின் செயல்பாடு விரைவில் பாதிக்கப்படும். எனேவ போனின் பேனல் கவரை கழற்றிவிட்டு ஒரு மென்மையான துணியில் வைத்து சார்ஜ் போடலாம்.
விரைவு சார்ஜ் ஆப்சன் நல்லதல்ல.
விரைவு சார்ஜ் ஆப்சனில் சார்ஜ் போடுவது உங்கள் பேட்டரிக்கு நல்லதல்ல. வேகமான சார்ஜால் அதிகப்படியான மின்சாரம் உங்கள் பேட்டரிக்கும் கிடைக்கும். இதனால் பேட்டரியின் வெப்பமும் அதிகரிக்கும். எனவே நார்மசல் சார்ஜிங் ஆப்சனை பயன்படுத்துவது நல்லது.
ஒருவேளை உங்கள் செல்போன் அதிகப்படியான ஹீட் ஆகிவிட்டால் உடனே பவர் பட்டனை அழுத்தி பிடித்து சில வினாடிகள் டிஸ்பிளேவை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். இப்படி செய்தால் அறை வெப்பநிலைக்கு செல்போன் மாறிவிடும்.
இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள்
சிலர் இரவு சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிடுவார்கள். இதனால் இரவு முழுவதும் அதிகப்படியான நேரம் சார்ஜ் ஆவதால் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படும்.
பேட்டரி பாதுகாப்பு ஆப்களை பயன்படுத்த வேண்டாம்
உங்கள் போனில் இல்லாத பேட்டர் பாதுகாப்பு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டாம். உங்கள் போன் மெதுவாக இருப்பதாக கூறி, பேட்டரி ஆப்களின் சில விளம்பரங்கள் ஸ்கிரீனில் தோன்றும் அவற்றை நாம் டவுன்லோடு செய்து பயன்படுத்தினால், உங்கள் போனின் மெமரி குறைவதுடன், செயல்வேகத்தையும் பாதிக்கும்.
குறைந்த பட்சம் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் போடுங்கள்
உங்கள் போனுக்கு குறைந்த பட்சம் 80 சதவீதம் அளவுக்காவது சார்ஜ் போடுங்கள். இது கட்டாயம் இல்லையென்றாலும், அதிகபட்ச செயல்திறனுடன் பேட்டரி இருக்க உதவும்.
20 சதவீதம் சார்ஜ் குறைந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் போடுங்கள்
குறைந்த பட்சம் 20 சதவீதம் சார்ஜ் குறைந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் போடுங்கள். உடனுக்கு உடனே சார்ஜ்போடுவது பேட்டரியை பாதிக்கும்.
உயர்தரமான பவர் பேங்க்
நீங்கள் வாங்கும் பவர் பேங்க் அதிக மின்சாரமோ, அல்லது வோல்டேஜ் பிரச்னையில் இருந்தோ உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்குமா என்பதை உறுதி செய்து வாங்குங்கள்
பவர் பேங்க் பயன்படுத்துகையில் ஹெட்போனை பயன்படுத்த வேண்டாம்.
பவர் பேங்கில் சார்ஜ்போட்டுக்காண்டே ஸ்மார்ட்போனில் ஹெட்போனை பயன்படுத்தாதீர்கள். இதனால் அதிகப்படியான வெப்பநிலையால் உங்கள் போனின் பேட்டரி விரைவில் காலாவதி ஆகிவிடும்.-Source: tamil.eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!