குளிர் காலத்தில் ஆஸ்துமாவிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?


மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் உபாதைகளுக்கு அனைவரும் உடனே வைத்தியரை நாடுகிறார்கள். ஆனால், முன்பெல்லாம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி என்பவற்றின் மூலம் தீரா நோய்களில் இருந்தும் முற்று முழுதாக விடுதலை பெற்றனர் எம் முன்னேர்கள்.

உண்மையில், அன்றாட வாழ்வில் எமக்கு ஏற்படும் ஆஸ்துமாவை யோகா முத்திரையைக் கொண்டு சுலபமாக இல்லாதொழிக்கலாம். ஆம்! பின்வரும் முத்திரையைக் கையாண்டு இதற்கு எளிதில் தீர்வு காணலாம்.

இந்த முத்திரையை எவ்வாறு செய்வது?
சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையையும் நடுவிரலால் கட்டை விரலின் நுனியையும் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.

இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்கும் வண்ணம், ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது.


ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை இதைச் செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

இதனால் கிடைக்கும் பலன்கள்

01. மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம் ஆகியவை குறையும்.

02. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும்.

03. இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது.


04. சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை குணமாகும்.

05. குழந்தைகள் முதல் வயோதிபர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இருமல் கட்டுக்குள் வரும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!