குளிர் காலங்களில் கால்களை சுத்தமாக பாதுகாப்பது எப்படி? இத முதல்ல படிங்க..!


டிசெம்பர் மாதம் தொடங்கி விட்டாலேயே கொண்டாட்டமும் ஆரம்பித்து விடும். கொண்டாட்டம் மட்டுமல்ல கூடவே மழையும் ஆரம்பித்து விடும். குளிர், மழை எனச் சொல்லவே தேவையில்லை. குளிர் காலங்களில் நாம் எமது உடலை பாதுகாப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

ஏனெனில் மழைக்காலங்களில் சரும தொற்றுக்கள் ஏற்படுவது அதிகம். குறிப்பாக நாம் எமது கால்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். மழைக்காலங்களில் தான் இந்த சேற்றுப்புண் ஏற்படுகின்றது.


இது சரி, மழைக்காலங்களில் நாம் எமது கால்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

01. ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்பு போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.

02. வெளியே சென்று வீடு திரும்பியதும் கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் கழுவி நன்றாக உலர வைக்கவும்.


03. கால் நகங்களை வெட்டவும். கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கு தொற்றாக மாற வாய்ப்புண்டு.

04. சரியான காலணிகளை அணியுங்கள். ஏனெனில் காலணிகள் அணிந்து மழை நீரில் நடக்கும் போது அதனுள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கென்வஸ் காலணிகள் அணிவதை தவிருங்கள்.


05. பெடிக்யூர் செய்யுங்கள். மழைக் காலத்தில் பெடிக்யூர் செய்வது அவசியம். இதன் மூலம் கால்களில் படிந்துள்ள அழுக்கு அகற்றப்படும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!