ஒரு முக்கோண காதல் கதை… பயத்தில் 2 பேர் எடுத்த விபரீதமுடிவு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார்.

நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார். இதனையெடுத்து சாய்குமார், சூரியபிரகாஷ் இருவரும் மாணவியிடம் தங்களது காதலை வெளிப்படுத்தினர்.

இவர்கள் இரண்டு பேரையுமே மாணவி காதலித்து வந்தார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த 2 பேருமே, மாணவி தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக நினைத்தனர்.

மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர். சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.

இதுதான் மாணவிக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார். இதனை செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சாய்குமார் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார், தாலி கட்டும் வீடியோக்களை பார்த்து சூரியபிரகாஷ் பெருத்த அதிர்ச்சி அடைந்தார்.

இதனால், நேரடியாகவே அந்த மாணவியிடம் இது பற்றி கேட்டார் அப்பட்டமாக வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்றார்.

சூரியபிரகாஷ் மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, சாய்குமாருக்கு தலையே கிறுகிறுத்து போய்விட்டது. இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர்.

உடனடியாக நண்பர்கள் இருவரும் மாணவியின் வீட்டுக்கு போனார்கள். அந்த பெண்ணின் வீட்டில், பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்.

அனைவரது முன்னிலையிலும் மாணவியிடம் இதுகுறித்து 2 காதலர்களும் கேள்வி எழுப்பினார்கள். இந்த முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டார்கள். இப்படி 2 பேருமே திடுதிப்பென்று வீட்டுக்குள் வந்து, கேள்வி எழுப்புவார்கள் என்று மாணவி கொஞ்சமும் நினைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியும், அவமானமும் கலந்து கூனிக்குறுகி நின்றார். தினம் தினம் அவமானத்தில் தவித்தார். 2 காதலின் குட்டு வெளிப்பட்டதுடன், வீடியோவும் கசிந்துவிட்டதே என்று மனம் கலங்கி போனார்.

கடைசியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். எங்கே தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோயிருக்கிறது. ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!