இணையத்தில் வைரலான மும்பை வாலிபரின் காபி கடை!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் கூட தங்களது சில நேரங்களில் வித்தியாசமான விளம்பரங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் மும்பையை சேர்ந்த மயங்க் பாண்டே என்பவரது காபி கடை மும்பையில் பிரபலமாகி வருகிறது. அவரது கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்தான் இதற்கு முக்கிய காரணம்.

அதாவது அந்த போஸ்டரில் நான் எனது காபி கடையை உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கு ஆதரவு தாருங்கள் என இருந்தது.

இதனை பிரசாந்த் நாயர் என்பவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இணைய பயனர்கள் பலரும் மயங்க் பாண்டேவின் வெற்றிக்காக வாழ்த்துவதாக கூறி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!