16 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 41 வயது பெண்!

இந்தோனேஷியாவை சேர்ந்த 41 வயது பெண் 16 வயது சிறுவனை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள மேற்கு கலிமந்தன் பகுதியை சேர்ந்தவர் மரியானா. 41 வயதான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே வசித்து வருபவர் லிசா.

இவரது மகன் 16 வயது கெவின் தின்பண்டங்கள் வாங்குவதற்காக மரியானாவின் கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

குறிப்பாக மரியானா கெவின் மீது தீவிர காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் தன்னை விட 25 வயது சிறியவனை திருமணம் செய்ய அவரது தாயார் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் மரியானாவுக்கு ஏற்பட்டது.

ஆனால் தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்தோனேஷியா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் சென்றது. அந்நாட்டை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 19 ஆகும். எனவே கெவின் 19 வயதாகும் வரை இருவரும் தனியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!