மாமியாரின் கள்ளக்காதல் உறவை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு மகன் முகுந்தன் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தேவா (32). இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கோமதியுடன் (40), தேவாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கோமதி கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இது தேவாவுக்கு சாதகமாக அமையவே கோமதிக்கும் தேவாவுக்கும் கள்ளத்தொடர்பு வலுவானது.
இந்நிலையில் கோமதியின் மகள் ரம்யாவை (22) தேவா தனது காமவலைக்குள் சிக்க வைக்க முயற்சி செய்து வந்தார். ரம்யாவை தேவா காதலித்தது போல் நடித்தார். இதனால் பல்வேறு வகைகளில் ரம்யாவின் குடும்பத்திற்கு உதவிகளை தேவா செய்து வந்தார்.
இதற்கிடையில் தேவாவின் நண்பர் முகுந்தனை ரம்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாமியார் கோமதியிடம் கள்ளத்தொடர்பில் இருக்கும் தேவாவை முகுந்தன் கண்டிக்க தொடங்கினார்.
இதனால் நண்பர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு உருவானது. முகுந்தனிடம் பிரச்சனை தீவிரமாகவே கோமதிக்கு புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகர் புது நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தேவா தங்க வைத்தார்.
கோமதி தங்கி இருந்த வீட்டுக்கு எதிரே முகுந்தன் அவரது மனைவி ரம்யா இருவரும் வாடகைக்கு குடி வந்தனர். அடிக்கடி மாமியார் கோமதி வீட்டுக்கு வரும் தேவா, முகுந்தனின் மனைவியிடமும் முன்பை போல நெருங்கி பழக ஆரம்பித்தார்.
இதனை கோமதி கண்டித்துள்ளார். இதனால் தேவாவுக்கும் கோமதிக்கும் இடையே அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
தேவாவிடம் இருந்து விலக கோமதி முடிவு செய்தார். கடந்த 12ஆம் தேதி இரவு முகுந்தனும், ரம்யாவும் ஜெயிலர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாமியார் கோமதியிடம் இருந்து முகுந்தனுக்கு செல்போனில் திடீர் அழைப்பு வந்து உள்ளது. உடனே படம் பார்ப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தனர். அங்கு மாமியாரிடம் தேவா தகராறு செய்து கொண்டு இருப்பதை தட்டிக்கேட்டு உள்ளார். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த தேவா தான் வைத்திருந்த கத்தியால் முகுந்தனை கழுத்து, வயிறு, நெஞ்சு பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் முகுந்தன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து தேவாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!