உலக பணக்காரர்களில் 3-வது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஜெப் பெசோஸ் தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் உள்ள பங்களாவை ரூ.564 கோடிக்கு வாங்கினார். 1965-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா 1985-ம் ஆண்டு விரிவுப் படுத்தப்பட்டது.
இது 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 3 படுக்கை அறைகளும், 3 குளியல் அறைகளும் கொண்ட இந்த பங்களாவில் சொகுசு வசதிகள் உள்ளன.
மேலும் பங்களாவை புதுப்பித்து புதிய மெகா மாளிகையை ஜெப் பெசோஸ் உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார். தற்போது காதலிக்காக சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!