அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த சிறுமி, தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த பெற்றோர் டேனியல் மார்ஷலின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஜூன் 29-ந்தேதி நடைபெற்ற இத்திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற 12 நாட்களில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்து போனார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!